தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசு தின விழாவிற்கு தயாராகும் டெல்லி - Delhi police related news

டெல்லி: குடியரசு தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Republic day
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

By

Published : Jan 19, 2021, 10:48 PM IST

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அல்கொய்தா, காலிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகளை மக்களை எளிதில் அடையாளம் காண உதவும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் அதிகரிக்கும் கெடுபிடிகள்

  • கரோனா காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் அணிவகுப்பை பொதுமக்கள் கண்டு ரசிப்பது போல இம்முறை காண அனுமதியில்லை.
  • ப்ரவுஸிங் சென்டர், ஹோட்டல்கள், கெஸ்ட் கவுஸ் போன்றவற்றை போலீசார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். இது தவிர, வான்வழித் தாக்குதலுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காத வண்ணம் ட்ரோன் உள்ளிட்ட அனைத்து பறக்கும் சாதனங்களுக்கும் தடைவிதித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • காவல் ஆணையர் சார்பில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது ஐபிசி பிரிவு 188ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் பேரணி

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று மேற்கொள்ளவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்க வலுவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஒருவேளை விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டால் அவர்களை எல்லையிலேயே நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி முகத்தை மார்பிங் செய்து பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details