தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது 2 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Brih Bhushan
Brih Bhushan

By

Published : Jun 2, 2023, 3:40 PM IST

டெல்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து உள்ள டெல்லி போலீசார், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என தெரிவித்து உள்ளனர்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் முன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக கூறிய வீரர், வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாருக்கு சென்றனர். அங்கு, ஹர் கி பவுரி பகுதியில் கங்கை நதியின் பதக்கங்களை வீச இருந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாய சங்க பிரதிநிதிகள், 5 நாள் அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, மற்றும் உலக மல்யுத்த அமைப்பும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் பக்கம் நின்று உரிய விசாரணை நடத்தக் கோரி அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பிரஜ் பூஷன் சரண் சிங்கி மீது 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள 10 புகார்களும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக மார்பு உள்ளிட்ட பகுதிகளை தொடுதல் போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உள் மற்றும் வெளிநாடுகளின் நடந்த போட்டிகளின் போதும், வீராங்கனைகளை தனியாக அழைத்து மிகவும் மோசமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பிரிஜ் பூஷன் சிங் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதில் புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதிற்கு குறைந்த மைனர் என்று கூறப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மைனர் பெண் சார்பாக அவரது தந்தை புகார் கொடுத்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த இரண்டு முதல் தகவல் அறிக்கையின் படி பிரிஜ் பூஷன் சிங் மீது 354, 354(ஏ), 354(டி) மற்றும் 34 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினர். இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :தெலங்கானா தின கொண்டாட்டம்: ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு இல்லை!

ABOUT THE AUTHOR

...view details