டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ தின அணிவகுப்புகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் தலைநகருக்கு வருகின்றனர்.
குடியரசு தின விழா: டெல்லி காவல் ஆணையர் நேரில் ஆய்வு! - குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்
டெல்லி: குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லி
இந்நிலையில், குடியரசு தின விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பரோலில் வெளியே வந்துள்ள கைதிகளை கண்காணிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், டெல்லி காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் காவல் துறை அலுவலர்கள், உளவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.