ஹல்த்வானி:உத்தரகாண்ட் மாநிலத்தில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பூப்பி என்ற பூபேந்திரா டெல்லி போலீசாரால் இன்று (பிப்.7) கைது செய்யப்பட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார்.
இதுகுறித்து டெல்லி போலீசார் தரப்பில், சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பூப்பி என்ற பூபேந்திரா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த நௌஷாத் அலியுடன் சேர்ந்து 2020ஆம் ஆண்டு கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்துக்குப்பின் இருவரும் தலைமறைவான நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நௌஷாத் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு கூட்டாளியான ஜக்கா என்ற ஜக்ஜித் சிங் கைது செய்யப்பட்டார்.