டெல்லி:நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதுமட்டுமல்லாமல் வரலாற்றிலேயே முதன்முறையாக டீசலும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் வாட் வரி குறைத்து வருகின்றன.