தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Delhi metro viral video: மெட்ரோவில் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் - கொந்தளித்த நெட்டிசன்கள் - netizens tweet

மிகப்பெரிய மெட்ரோ நிலையமான டெல்லி மெட்ரோவில் பல விநோதச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கும். அந்த வகையில் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

Delhi metro viral video:  மெட்ரோவில் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் (hair straightening) !
Delhi metro viral video: மெட்ரோவில் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் (hair straightening) !

By

Published : Jun 19, 2023, 10:26 AM IST

டெல்லி:டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சமீபத்தில் மெட்ரோ ரயில்களில் வீடியோக்கள் மற்றும் அநாகரிகமான செயல்களை படம் பிடிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நிலையமான டெல்லியில் பல விநோத சம்பவங்கள் நடந்த வண்ணம் இருகிறது. அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் ஆவதும் நடந்துகொண்டே உள்ளது.

இது போன்ற செயல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடனேயே,நேற்று (ஜூன் 18) டெல்லி மெட்ரோவில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரைப் (hair straightener) பயன்படுத்துவதைக் காட்டும் புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. டெல்லி மெட்ரோவில் நடந்த தொடர் விநோதச் சம்பவங்கள் சமீபத்தில் தலைப்புச் செய்தியாக வந்ததை அடுத்து இந்த வீடியோவும் அதனுடன் இணைந்துள்ளது.

அந்த வீடியோவில், டெல்லி மெட்ரோவில் ஒரு இளம்பெண் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரைப் (hair straightener) பயன்படுத்துகிறார். வீடியோவில் உள்ள அந்தப் பெண் மற்ற பயணிகளுடன் நின்று, தனது தலைமுடியை நேராக்குவதைப் பற்றி எதுவும் நினைக்காமல் மற்றவர்களின் முன்னிலையில் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.

இதையும் படிங்க:நேபாளத்தின் சிங்கப்பெண்: ஆசிட் வீச்சு முதல் மக்கள் பிரதிநிதிவரை!

இதனைத் தொடர்ந்து, பலர் இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் அதிகமான விருப்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் சமூக ஊடக பயனர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெறுகிறது.

வீடியோவில் உள்ள நபரை விமர்சித்து சமூக வலைதளப் பயனாளர்களில் ஒருவர், "இது மெட்ரோ, உங்கள் வீடு அல்ல" என்று கூறினார். மற்றொருவர், "டெல்லி மெட்ரோவின் புதிய கோஷம்: நீங்கள் விரும்பியபடி அதை எந்த வகையிலும் பயன்படுத்தவும்" என்றார். வேறு ஒருவர் மெட்ரோவை "பல்நோக்கு போக்குவரத்து" என்று அழைத்து உள்ளார்.

முன்னதாக,டெல்லி மெட்ரோ ரயிலில் நடனமாடுபவர்கள், தகராறு செய்வது, முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் டிஎம்ஆர்சி, "பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற செயல்கள் டெல்லி மெட்ரோவுக்குள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க:குஜராத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்த மசூதி - இடிக்க முயற்சி.. வெடித்த வன்முறை.. ஒருவர் கொலை!

ABOUT THE AUTHOR

...view details