தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பால்கனியில் இருந்து மகனை தூக்கிவீசி, தந்தையும் தற்கொலை முயற்சி.. காரணம் என்ன? - delhi man threw his son in balcony

பால்கனியில் இருந்து 2 வயது குழந்தையைத் தூக்கி வீசிய தந்தை, சற்றும் தாமதிக்காமல் தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ்
போலீஸ்

By

Published : Dec 17, 2022, 11:00 PM IST

டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள ஒக்லா பகுதியைச் சேர்ந்தவர் மன்சிங். அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் பால்கனிக்கு சென்ற மன்சிங். திடீரென 2 வயது மகனை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.

தொடர்ந்து அவரும் பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளார். தந்தை மற்றும் மகனும் காயங்களுடன் வலியில் துடிதுடித்துள்ளனர். சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மன்சிங்கின் மனைவி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கணவன் மற்றும் மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பால்கனியில் இருந்து மகனைத் தூக்கி வீசிய மன் சிங், தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றது ஏன் என விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஷாம்பூவால் நின்ற திருமணம்... காரணம் கேட்டு மிரண்ட மணப்பெண் வீட்டார்...

ABOUT THE AUTHOR

...view details