தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் ரத்து... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! - மணீஷ் சிசோடியா ஜாமீன் தள்ளுபடி

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Manish Sisodia
Manish Sisodia

By

Published : Jun 5, 2023, 3:48 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மதுபான கொள்கை குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் அரசியல் தலைவர் பலர் இந்த ஆதாயம் அடைந்து இருப்பதாகவும் துணை நிலை ஆளுநர் தெரிவித்தார். மேலும் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறும் துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

இந்த புகார் தொடர்பாக அப்போதைய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த புகாரில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக சிபிஐ அளித்த தகவலை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த மார்ச் 9ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி கைது செய்தனர். அதுதொடர்ந்து மணீஷ் சிசோடியாவின் காவலை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் நீட்டிப்பு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் அது தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை மணீஷ் சிசோடியா கலைக்க கூடும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில் நீதிபதிகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மனைவியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை உடன் இருந்து கவனித்துக் கொள்ள ஜாமீன் வழங்குமாறும் மணீஷ் சிசோடியா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில், மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியாவுக்கு ஒருநாள் மட்டும் ஜாமீன் வழங்கி சிறப்பு அமர்வு நீதிபதி தினேஷ் குமார் சர்மா உத்தரவிட்டார்.

இந்நிலையில் 6 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மணீஷ் சிசோடியா தரப்பில் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் வழக்கு தொடர்பான சாட்சி மற்றும் அதரங்களை அழிக்கக் கூடும் என அமலாக்கத் துறை தரப்பில் முறையிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து மனுவை ரத்து செய்தனர்.

இதையும் படிங்க :"இந்தியாவில் இரண்டே சித்தாந்தம் தான்... ஒன்று மகாத்மா காந்தி.. மற்றொன்று கோட்சே.." - ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details