தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை நிறுத்த கோரிய மனு தள்ளுபடி! - டெல்லி உயர்நீதிமன்றம்

ஸ்பைஸ்ஜெட் விமான சேவையை நிறுத்த உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

SpiceJet
SpiceJet

By

Published : Jul 18, 2022, 2:39 PM IST

டெல்லி:ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானங்களில் அண்மை காலமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதால், அதன் சேவையை நிறுத்த உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாள்தோறும் சராசரியாக 30 சம்பவங்கள் இதுபோல் நடக்கின்றன. ஆனால், அவை எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கொண்டிருக்கவில்லை. அவற்றின் பாதுகாப்பு மேலாண்மையில் சில குறைபாடுகள் இருக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். இதை பதிவு செய்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அகமதாபாத்தில் கனமழை - சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

ABOUT THE AUTHOR

...view details