பிரபல சமூக வலைதள நிறுவனமான வாட்ஸ்அப் அறிவித்துள்ள புதிய பிரைவசி கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய பிரைவசி கொள்கை தொடர்பாக கம்பெடிசன் கமிஷன் ஆஃப் இந்தியா(C.C.I-Competition Commission of India) அமைப்பு விசாரணை நடத்தவுள்ளதாக மார்ச் மாதம் அறிவித்தது.
வாட்ஸ்அப் நிறுவன கோரிக்கையை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம் - நீதிபதி நவீன் சாவ்லா
சி.சி.ஐ.(CCI) அமைப்பிற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
![வாட்ஸ்அப் நிறுவன கோரிக்கையை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம் Delhi HC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11473577-155-11473577-1618924627985.jpg)
Delhi HC
இந்த விசாரணையை சி.சி.ஐ. அமைப்பு மேற்கொள்ளக்கூடாது என்று பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களின் மனுவில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.