டெல்லி:கெளதம் நவ்லகாவின் ட்ரான்சிட் ரிமாண்டை ரத்து செய்த நீதிபதி எஸ். முரளிதர் குறித்து திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி 2018ஆம் ட்வீட் வெளியிட்டார். அதற்காக, அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து இயக்குநரை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ( ஏப்.10 ) விடுதலை செய்தது.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி சித்தார்த் மிருதுல் மற்றும் நீதிபதி விகாஸ் மகாஜன் ஆகியோர் கூறுகையில், "நீதிபதி எஸ். முரளிதருக்கு எதிராக விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்படுகிறது. அவர் விடுவிக்கப்படுகிறார்” என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “அக்னிஹோத்ரியை வழக்கிலிருந்து விடுவிக்கும் போது, எதிர்காலத்தில் அவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கிடையில், விவேக் அக்னிஹோத்ரி உடல் ரீதியாக ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் அவர் நீதிமன்றம், நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும், வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் விவேக் அக்னிஹோத்ரி கூறியதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க:மீண்டும் சிக்கலில் சித்த மருத்துவர் ஷர்மிகா.. மேலும் இரண்டு புகார்கள் பதிவு!