தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் வீடு தேடி வரும் மதுபானம்!

By

Published : Jun 1, 2021, 1:29 PM IST

டெல்லி: ஆன்லைனில் ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டிற்கே நேரடியாகச் சென்று விநியோகிக்க டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Delhi
டெல்லி

கரோனா தொற்று இரண்டாம் அலை தலைநகர் டெல்லியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், மது பிரியர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கில் புதிய தளர்வாக மதுபானங்களை நேரடியாக வீட்டிற்கு சென்று விநியோகம் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து மதுபானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியாது. எல்-13, எல்-14 வகை உரிமம் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் மட்டுமே தங்கள் கடைகளுக்கு மொபைல் செயலி, இணையதளம் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details