நாட்டின் கரோனா தொற்றின் 2ஆவது அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாகத் தலைநகர் டெல்லி உள்ளது. இரண்டாம் அலையை எங்க கட்டுப்படுத்த முடியாமல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி தேவை குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லிக்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவை கெஜ்ரிவால் கோரிக்கை!
டெல்லியில் அடுத்த மூன்று மாதங்களுக்குத் தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற சுமார் 3 கோடி தடுப்பூசிகள் தேவை என, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Arvind
அதில், டெல்லிக்கு இதுவரை 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு மேலும் மூன்று கோடி டோஸ்கள் தேவைப்படும். தற்போதைய சூழலில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், அதை 3 லட்சமாக உயர்த்த அரசு முயற்சித்து வருகிறது.
அதற்கு துணை புரியும் விதமாக, மத்திய அரசு விரைவாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மத்திய அரசு விரைந்து செயல்பட்டால் மட்டுமே அடுத்த அலையைத் தடுத்து நிறுத்த முடியும் என கேட்டுக் கொண்டுள்ளார்.