டெல்லி மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கீர்த்தி நகரில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. அதன் பேரில், 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயன்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் மேலும் தீ பரவாமலிருக்க அப்பகுதியிலிருந்த 50 குடிசைகள் அகற்றப்பட்டு, அதில் வசித்த 200 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.