டெல்லி : டெல்லியிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கத்தார் ஏர்வேஸ், “டெல்லி-தோஹா நகருக்கு 100 பயணிகளுடன் மார்ச் 21ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்றது. இந்நிலையில் கடும் மூட்டம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் இடையூறுக்கு பயணிகளிடம் கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதையும் படிங்க : 133 பயணிகள்.. விபத்துக்குள்ளான சீன விமானம்.. பகீர் தகவல்!!