தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஜாமீன் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு - jacqueline

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் இடைக்கால ஜாமீனை நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஜாமீன் நீட்டிப்பு
ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஜாமீன் நீட்டிப்பு

By

Published : Oct 22, 2022, 10:23 PM IST

புதுடெல்லி: பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இடைக்கால ஜாமீனை நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறப்பு நீதிபதி ஷைலேந்திர மாலிக், பெர்னாண்டஸுக்கு 50ஆயிரம் ரூபாய் தனிப்பட்ட பத்திரத்தில் நிவாரணம் வழங்கி, வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று, நீதிபதி பிரவீன் சிங், அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையின் படி, பெர்னாண்டஸை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறையால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் முதல்முறையாக துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீரா மிதுனை காணவில்லை! - போலீசில் புகாரளித்த தாயார்..

ABOUT THE AUTHOR

...view details