டெல்லி: காரில் முகக்கவசம் அணியாமல் வந்ததால் காவல் துறையினர் நிறுத்தியபோது அவர்களிடம் கணவன் மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு
டெல்லி தர்யா கஞ்ச் பகுதியில் முகக்கவசம் அணியாமல் காரில் வந்த கணவன், மனைவி ஆகியோரை காவல் துறையினர் தடுத்த நிறுத்தினர். இதனால் கோபமடைந்த அவர்கள் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் தர்யா கஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். முகக்கவசம் அணியாமல் இருந்த அவர்கள் மீது விசாரணை நடத்திய காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஐபிசி பிரிவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முகக்கவசம் அணியாமல் காவலர்களுடன் வாக்குவாதம்
டெல்லி படேல் நகர் பகுதியில் வசித்துவரும் பங்கஜ், அபா ஆகியோர் காரில் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளனர். இதையடுத்து காவலர்கள் தடுத்து இதுகுறித்து கேட்டபோது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "நான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றுள்ளேன். காரில் பயனிக்கும் நான் எதற்கு முகக்கவசம் அணிய வேண்டும்? என் கணவருக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்வது" என்று கடும் கோபத்தில் காவலர்களிடம் பேசினார் அந்த பெண்மனி.
இதற்கு காவலர் ஒருவர், "யுபிஎஸ்சி தேர்வு முடித்துள்ள நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று பதில் கூறினார்.