புது டெல்லி:தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லி மருத்துவ சங்கத்தின் செயலாளர் Dr. அஜய் காம்பீர் வெளியிட்டுள்ள அறிக்கை முதலமைச்சரின் கூற்றுக்கு முரணாக அமைந்துள்ளது. அவரது தகவலின்படி 60 சதவீதம் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் தகவல்
மேலும் அவர் கூறுகையில், "பணிக்குழு கூட்டத்தில் புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வந்தன. தடுப்பூசி தொடர்பாக மூன்று நிலைகளில் இடைவெளி காணப்பட்டது. முதலில் பிராந்திய அளவில், மற்றொன்று மைக்ரோ அளவில். மூன்றாவதாக பாலின அளவில்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய பெண்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. இவர்களில் கர்ப்பமானவர்களும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவர்.