டெல்லி:பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் கான், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றும்படி, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.
மீ-டூ இயக்கத்தின்போது, சஜித்கான் மீது பல நடிகைகளும், மாடல்களும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர் என்றும், அப்படிப்பட்டவரை குழந்தைகளும் குடும்பங்களும் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் ஸ்வாதி மாலிவால் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் எதிரொலியாக தனக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.