டெல்லி:மேலும் தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு (பணியாளர்கள்) திறனுடன் மீண்டும் தொடங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் சந்தைகளில் ஒற்றைப்படை - இரட்டைப் படை இலக்க வருகை முறையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊரடங்கானது வார இறுதி நாள்களான வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து திங்கள்கிழமை காலை 5 மணிவரை நடைமுறையில் இருந்துவந்தது. கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்த கோப்பு ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை - இரட்டைப்படை அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் இனி அனைத்து நாள்களிலும் திறக்கலாம். தனியார் அலுவலகங்கள் முடிந்தவரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை மாற்றச் சொன்னாலும், இனி 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.