தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Arvind Kejriwal
Arvind Kejriwal

By

Published : Jan 4, 2022, 8:45 AM IST

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா அறிகுறிகள் லேசாக தென்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்பு இன்று (ஜன.4) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “தனக்கு கோவிட் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில் என்னை சோதித்துக் கொண்டேன். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை (ஜன.3) தேர்தல் பரப்புரைக்காக உத்தரகாண்ட் சென்றிருந்தார். தொடர்ந்து டேராடூனில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்விலும் கலந்துகொண்டார்.

டெல்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 99 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில் மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் 6.46 சதவீதம் அதிகரித்துள்ளன. டெல்லியில் கரோனா, ஓமைக்ரான் பாதிப்புகள் அதிகமிருப்பதால், மாநிலம் ரெட் அலர்ட்டில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கூறிய மாநிலங்களில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Exclusive: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - ககன்தீப்சிங்

ABOUT THE AUTHOR

...view details