தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி கரோனாவின் தலைநகரமாக மாறும் - உயர் நீதிமன்றம் காட்டம் - கரோனாவின் தலைநகர் டெல்லி

டெல்லி: டெல்லி நகரம் விரையில் கரோனாவின் தலைநகரமாக மாறும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான மாநில அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

டெல்லி கரோனாவின் தலைநகரமாக மாறும்- உயர் நீதிமன்றம் காட்டம்
டெல்லி கரோனாவின் தலைநகரமாக மாறும்- உயர் நீதிமன்றம் காட்டம்

By

Published : Nov 5, 2020, 7:22 PM IST

"கரோனா தொற்று நிலைமையை சரியான முறையில் கையாள டெல்லி அரசு தவறிவிட்டது. டெல்லி நகரம் விரைவில் நாட்டின் கரோனா தலைநகராக மாறும்" என்று நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று சோதனைகளின் அடிப்படையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி அரசு பல கூற்றுகளைக் கூறினாலும், டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துவருகிறது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

வடக்கு, தெற்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சிகளின் பல்வேறு பணியாளர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடர்பான மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கும் வேளையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 842 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நான்கு லட்சத்து ஒன்பதாயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details