தமிழ்நாடு

tamil nadu

டெல்லியிலிருந்து லண்டன் புறப்படும் விமானங்களுக்கு மிரட்டல்: காவலர்கள் குவிப்பு

டெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

By

Published : Nov 4, 2020, 9:47 PM IST

Published : Nov 4, 2020, 9:47 PM IST

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படும் இரண்டு ஏர் இந்தியா விமானங்களுக்கு, சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்னும் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த இரண்டு விமானங்களும் நாளை லண்டனைச் சென்றடைய முடியாது எனக் கூறிவிட்டு அந்நபர் தொலைபேசியைத் துண்டித்துள்ளார்.

இதனை அடுத்து, விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காவல் துணை ஆணையர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், விமான நிலையத்தைத் தொடர்புகொண்ட சீக்கியர்களுக்கான நீதி என்னும் அமைப்பைச் சேர்ந்த குர்பந்த்வந்த சிங் பனுன் என்னும் நபர், தங்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் நாளை லண்டனுக்குப் புறப்படும் ஏர் இந்தியா 111, ஏர் இந்தியா 531 ஆகிய இரண்டு விமானங்களில் பயணிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்" என்றார். இதனை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: சிபிஐக்கு நெருக்கடி: சிறப்பு அனுமதியை திரும்பப்பெறும் கேரளா!

ABOUT THE AUTHOR

...view details