தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசம்.. நவ.29 பள்ளிகள் திறப்பு

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தற்போது, தர அலகு 300ஐ கடந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் பள்ளிகள் நவ.29ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

Delhi air quality
Delhi air quality

By

Published : Nov 25, 2021, 1:53 PM IST

Updated : Nov 25, 2021, 4:37 PM IST

டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் குறித்து காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR- System of Air Quality and Weather Forecasting and Research) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டெல்லி நகரின் காற்று தர அலகான AQI (Air quality index) மீண்டும் 300-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஞாயிறு 280ஆக இருந்த நிலையில், தற்போது 330ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து, காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சான்றுகளின்படி, காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு 'சிறப்பானது', 51இல் இருந்து 100 வரையிலான குறியீடு 'திருப்திகரமானது'.101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி 'மிதமானது'. 301க்கும் 400க்கும் இடையே 'மிகவும் மோசமானது'. 401க்கு மேலே இருந்தால் 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.

கடந்த மூன்று நாள்களாக காற்றின் திசை மாறியிருந்ததால், மாசு குறைந்து தரம் உயர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்குப் பின் காற்று மாசு உச்சத்தை தொட்டதால், தலைநகர் டெல்லியில் நவம்பர் 13ஆம் தேதி மாசு லாக்டவுன் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்தார். அதன்படி, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

நிலைமை மெல்ல சீராகிவருவதால் நவம்பர் 29ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Meghalaya congress: 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேறி மம்தா கட்சியில் ஐக்கியம்

Last Updated : Nov 25, 2021, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details