தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைநகரில் ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு காயச்சல் - இந்தியாவில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை

டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

dengue cases
dengue cases

By

Published : Dec 14, 2021, 8:19 PM IST

டெல்லி:நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் மொத்தமாக 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 4 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். இதனிடையே, டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் 9,260 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத அளவாகும். டெங்கு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 10 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், இந்தாண்டு 15 பேர் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் டெங்கு: 75 பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details