தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா - minister resign

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், டெல்லி சமூக நலத்துறை அமைச்சருமான ராஜேந்திர பால் கௌதம், மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா...
டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா...

By

Published : Oct 9, 2022, 5:55 PM IST

Updated : Oct 9, 2022, 7:18 PM IST

டெல்லி: ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், அக்டோபர் 5ஆம் தேதி நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறுவதாகவும், இந்து தெய்வங்களைக் கடவுளாகக் கருத மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பாஜக அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்ச்சித்தது.

பாஜக தனக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற பிரச்சாரங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் ராஜினாமா செய்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"என்னால் எனது தலைவர் ஸ்ரீ அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது கட்சிக்கோ எந்த பிரச்சனையும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. நான் கட்சியின் உண்மையான திடகாத்திரமானவன் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் கௌதம் புத்தர் காட்டிய கொள்கைகளை பின்பற்றுவேன்." என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Last Updated : Oct 9, 2022, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details