டெல்லியில் உள்ள கோகுல்புரி குடிசைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து கோகுல்புரி போலீசார் தரப்பில், கோகுல்புரியில் தீ விபத்து ஏற்பட்டதாக நள்ளிரவில் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்தோம். 13 தீயணைப்பு வாகனங்கள் மூலம் அதிகாலை 4 மணிவரை போராடி தீயை அணைத்தோம். இருப்பினும் 60 குடிசைகளில் நாசமாகின.