தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"சாமானிய மக்களின் குரலாக ஒலிப்போம்" - புதிதாக பதவியேற்ற ஆம்ஆத்மி எம்.பி.க்கள்...! - தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா

ஆம்ஆத்மியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். சாமானிய மக்களின் குரலாக ஒலிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

MPs
MPs

By

Published : May 2, 2022, 9:46 PM IST

டெல்லி: பஞ்சாப், கேரளா, அஸ்ஸாம், நாகாலாந்து உள்ளிட்ட 6 மாநிலங்களில், 13 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மூன்று பேருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சதா, " குறைந்த வயதிலேயே இந்த பெரிய வாய்ப்பை அளித்த ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி. ஆம்ஆத்மி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பது பிரச்னை இல்லை. நாங்கள் சாதாரண இந்தியக் குடிமகனின் குரலை அவையில் ஒலிக்கச் செய்வோம். வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டதே சாதாரண மக்களின் சக்திக்கு எடுத்துக்காட்டு. நாங்கள் சாமானிய மக்களுக்கு குரல் கொடுப்போம்" என்று தெரிவித்தார்.

அசோக் மிட்டல் பேசியபோது, "நான் கல்வித்துறையில் உள்ள பிரச்னைகளை எழுப்புவேன். அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க, கல்வித்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெர்மனியில் சிறுவனுடன் தேச பக்தி கீதம் பாடிய நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details