தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்: இரண்டு பேர் கைது! - டெல்லியில் ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு
பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு

By

Published : Aug 19, 2021, 2:14 PM IST

டெல்லி, சாஷ்திரி பார்க் பகுதியில் ஓடும் காரில் 22 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை அப்பெண் அளித்த புகாரின் போரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனது கணவருடன் காசியாபாத் பகுதியில் வசித்து வரும் அப்பெண்ணுக்கு சில நாள்களுக்கு முன்பு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை ரோகித் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனக்கு தெரிந்த இடத்தில் வேலை உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு

நீண்ட நாள்களாக வேலை தேடி வந்த அப்பெண், இதை நம்பி அவரை சந்திக்க முடிவு செய்துள்ளார். மறுநாள், அப்பெண்ணை சந்திக்க மற்றொரு நபருடன் வந்துள்ளார் ரோகித்.

மூவரும் காரில் பயணிக்கத் தொடங்கினர். அப்போது, திடீரென இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்களைத் தடுத்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணை கொடூரமாக இருவரும் தாக்கியும், கொலை செய்துவிடுவோம் என மிரட்டியும் உள்ளனர்.

அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், சிசி டிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:மகன் தற்கொலை செய்தியை கேட்ட தாயும் விபத்தில் பலி!

ABOUT THE AUTHOR

...view details