தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை: விரைவில் சரியாகிவிடும் எனத் தகவல் - ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை

உற்பத்தியை அதிகரித்ததன் காரணமாக 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி விநியோகத்தில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னை இம்மாதத்துக்குள் சரியாகிவிடும் எனவும் ஸ்புட்னிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை
ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை

By

Published : Aug 5, 2021, 10:50 AM IST

இதுகுறித்தான செய்திக்குறிப்பில், "ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு காரணமாக தடுப்பூசியின் இரண்டாம் கூறு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்துக்குள் தீர்க்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கரோனா கொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக Vaccines international medical journal எனப்படும் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், அசர்பைஜான், அர்ஜன்டினா உள்ளிட்ட நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே ஸ்புட்னிக், ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் சோதனை தொடங்கியது. ஜூலை மாத இறுதியில் இந்தத் தடுப்பூசிகள் குறித்தான நேர்மறையான முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த வாரம் இந்தத் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்தான நேர்மறையான முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தத் தடுப்பூசியின் செயலாற்றல் காரணமாக பல நாடுகளிலும் இதன் தேவை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் ஒரே நாளில் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி!

ABOUT THE AUTHOR

...view details