சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ஸ்மிதா சதுர்வேதி, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் தனது மகனின் பாஸ்டு அவுட் அணிவகுப்பை பூரிப்போடு கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அதற்கு காரணம், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மிதா சதுர்வேதியும் அதே அகாடமியில்தான் பயிற்சி பெற்றார். தற்போது தனது மகனும் அங்கு பயிற்சி முடித்து ராணுவப் பணியை தொடங்குவதை மகிழ்ச்சியுடன் பார்த்தார்.
ராணுவ பெண் அதிகாரியின் நெகிழ்ச்சி தருணம்... 27 ஆண்டுகளுக்கு முன்பு தாய் பயிற்சி பெற்ற அதே அகாடமியில் பயிற்சி பெற்ற மகன்... - பாஸ்டு அவுட் அணிவகுப்பு
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஸ்மிதா சதுர்வேதி, 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயிற்சி பெற்ற அதே அகாடமியில் தனது மகனும் பயிற்சி பெறுவதைக் கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த அரிய தருணம் குறித்து சென்னை ராணுவ கேடட் பயிற்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஸ்மிதா தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், "ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஸ்மிதா சதுர்வேதி, புகழ்பெற்ற ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் கேடட்டாக இருந்த தனது பழைய நாட்களை நினைவு கூர்ந்தார். தனது மகன் தன்னைப் போலவே ராணுவத்தில் சேர்வதற்காக அதே அகாடமியில் பயிற்சி பெற்றதைக் கண்டு பரவசப்பட்டார். ஒரு ராணுவ அதிகாரிக்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தருணம் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராணுவ மோப்ப நாய்க்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை