டெல்லி : பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு திங்கள்கிழமை (ஜன.10) கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.
இது குறித்து அவர் ட்விட்டரில், “லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கரோனா வைரஸ் தொற்று எனக்கு இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் 400 ஊழியர்கள் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் கரோனா பெருந்தொற்று வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், “மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். எனினும் மாநிலத்தில் கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கரோனா பரவல்: ஹரியானாவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்