தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு!

அமெரிக்கா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய அந்நாட்டு விண்வெளி நிறுவனத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

Rajnath
Rajnath

By

Published : Apr 13, 2022, 11:01 PM IST

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், இந்தியா - அமெரிக்கா இடையே விண்வெளி ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பிறகு வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மேக் இன் இந்தியா" திட்டத்தில் இணைய அமெரிக்க விண்வெளி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து, பல வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்குவது குறித்து அமெரிக்க நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரௌலி நகருக்குச் செல்ல முயன்ற தேஜஸ்வி சூர்யா கைது.!

ABOUT THE AUTHOR

...view details