டெல்லி: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக, எதிர்மனுதாரர்கள், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க, உத்தரவிட்ட நீதிமன்றம் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை ஒட்டி கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்து இருந்தார்.
மார்ச் 23, 2023 அன்று, கிரிமினல் அவதூறு தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 499 மற்றும் 500 சட்டப்பிரிவுகளின் கீழ், சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ராகுல் காந்தியை, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி, குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் அமா்வு நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கவாய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன், இன்று (ஜூலை 21ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் துவக்கத்தில், நீதிபதி பி.ஆர்.கவாய், தனது தந்தை 40 ஆண்டுகளாக காங்கிரஸுடன் தொடர்புடையவர் என்றும், அவரது சகோதரர் காங்கிரசில் இருப்பதாகவும், ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டை அவர் விசாரிக்க வேண்டுமா என்று கட்சியினரிடம் கேட்டார்.
ராகுல் காந்தியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, தங்களுக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார், அதேபோல, எதிர்தரப்பு வழக்கறிஞர், நீதிபதி கவாய் இந்த விஷயத்தை விசாரிப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த தண்டனையின் காரணமாக, ராகுல் காந்தி, சிங்வி, 111 நாட்கள் அவதிப்பட்டதாகவும், தகுதி நீக்கம் காரணமாக ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இழந்ததாகவும், வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி குறிப்பிட்டு இருந்தார். வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று வலியுறுத்திய சிங்வி, இந்த வழக்கை விசாரிக்க குறுகிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், தகுதிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, எதிர்மனுதாரர்கள், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
நீதிபதிகள் கவாய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு, இருதரப்பு வாதங்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் மனு மீது, எதிர்மனுதாரர்கள், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை, ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ராகுல் காந்தி, 'மோடி குடும்பப்பெயர்' கருத்து தொடர்பாக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், கடந்த 15ஆம் தேதி மேல்முறையீடு செய்துஇ இருந்தார். . இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே, நியாயமான விசாரணை கிடைக்கவில்லை, அரசாங்கத்தை வன்மையாக விமர்சிக்கும் எந்தவொரு அரசியல் பேச்சும் தார்மீக கொந்தளிப்பான செயலாக மாறும், இது ஜனநாயகத்தின் அடித்தளத்தை முற்றிலும் சிதைக்கும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில், கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக இருந்த அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
பிரதமரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் தனக்கு உரிமை உள்ளது. நாட்டின் ஏழை மக்களின் பணத்தை, அனில் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டதற்கான கணிசமான காரணத்திற்காக, அவர் மீது விமர்சனம் செய்ததாலோ அல்லது மாறுபட்ட கருத்து இருந்ததாலோ, அவதூறு புகாரை, தொடர முடியாது. என்று மேல்முறையீட்டு மனுவில், ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Monsoon session: மணிப்பூர் சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளி - 12 மணி வரை மக்களவை ஒத்தி வைப்பு!