தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தோனி மீதான அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை! - Aarka Sports

தோனிக்கு எதிராக அவரது முன்னாள் வணிகக் கூட்டாளிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு நாளை (ஜனவரி 18) விசாரணைக்கு வருகிறது

தோனிக்கு எதிரான அவதூறு வழக்கு; நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
தோனிக்கு எதிரான அவதூறு வழக்கு; நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 1:38 PM IST

நியூ டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த அவதூறு வழக்கு ஜனவரி 18ஆம் தேதி நீதிபதி பிரதீபா எம்.சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

தோனியின் முன்னாள் தொழில் கூட்டாளிகளாக மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி சௌம்யா தாஸ் ஆகியோர் தோனி தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நிரத்திர தடை கோரியும், தங்களுக்கு எதிராக அவதூறு, மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

தங்கள் பிரதிவாதிகள் தோனியிடம் இருந்து 15 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பெற்றதாகவும், அது குறித்து 2017இல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளார். இதனால் தங்கள் பிரதிவாதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்பட வேண்டும் என தோனிக்கு எதிரான வழக்கில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் திவாகர் மற்றும் தாஸ் ஆகிய இருவருக்கும் எதிராக ராஞ்சியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் கிரிக்கெட் அகாடமிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி 16 கோடி மோசடி செய்ததாக கூறி தோனி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தோனியின் பிரதிநிதிகள் தோனியின் சார்பில், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மிகிர் திவாகர் மற்றும் சௌம்யா தாஸ் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டணை சட்டம் 406 மற்றும் 420 ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் : பூஜைகள் தொடக்கம்! ஒவ்வொரு நாளும் என்னென்ன வழிபாடுகள் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details