டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் வீரருமான் எம்.எஸ்.தோனி இம்மாதம் தொடக்கத்தில், முன்னாள் தொழில் கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி செளமியா தாஸ் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த புகாரில், மிஹிர் திவாகர் மற்றும் செளமியா தாஸ் ஆகியோரின் நிறுவனமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தோனி இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு கைழுத்திட்டுள்ளார்.
அதில் தான் சுமார் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தோனியின் முன்னாள் கூட்டாளிகள் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மீது வழக்குபதிவு செய்ய நிரந்தர தடை கோரியும், தங்களுக்கு எதிராக அவதூறு மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தை அனுகினர்.