டெல்லி: ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வரும் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ள ’பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு மத்தியப் பிரதேச அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதான் படம் மத்தியப்பிரதேசத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக-வை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாடலில் உள்ள ஆடைகளின் நிறம்(காவி) மிகவும் ஆட்சேபனைக்குரியவை. மேலும் மோசமான மனநிலையுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.