ஆக்ரா:இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கும் - அவரது காதலி ஜெயா பரத்வாஜுக்கும் இன்று (ஜூன் 1) ஆக்ராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்து கலந்து கொள்கின்றனர். தோனி, கோலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக நேற்று (மே 31) இரவு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் தீபக் சாஹர், ஜெயாவுடன் இணைந்து பஞ்சாபி, பாலிவுட் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். உறவினர்கள், நண்பர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சங்கீத் நிகழ்ச்சியில் தீபக் சாஹர் சிவப்பு நிற குர்தா-பைஜாமாவும், ஜெயா நீல நிறப் புடவை அணிந்தும் அழகாக வலம் வந்தனர்.