லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ரோஷா நிலையத்தில் நேற்று (அக். 31) ஜன்சேவா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரயிலின் கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் கழிவறையை திறந்து பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆணில் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரயில் கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் பெட்டியின் கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், இந்த உடல் பிகார் மாநிலம் பன்மங்கி சந்திப்பிலிருந்து ஷாஜஹான்பூர் வரை சுமார் 900 கிமீ தூரம் வரை கவனிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவங்களால் 5 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டது. அந்த உடலில் ஆடைகள் மட்டுமே இருந்தன. எந்த அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. முக்கியமாக கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. தற்கொலை என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்விற்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதுகுறித்து ரயில்வே மருத்துவமனை தரப்பில், இந்த உடல் 3 நாட்களாக கிடந்துள்ளது. ஏறக்குறைய அழுகிவிட்டது. உடல் காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஐந்துமாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு