பிகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 33 பேர் கள்ளசாயரத்தை அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகமதுபூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர், காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், கள்ளச்சாராயம் காய்ச்சிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.