தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்?! - நொய்டா காவல்துறையில் வழக்குப்பதிவு

நொய்டாவில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Death
பிரதமர்

By

Published : Apr 5, 2023, 9:09 PM IST

டெல்லி: நொய்டாவில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுடைய மின்னஞ்சல் முகவரிக்கு கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அதில், பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சிங் என்பவரது மின்னஞ்சல் முகவரியிலிருந்து இந்த கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சியின் சிஇஓ, நொய்டாவின் செக்டர்20 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை மிரட்டலுக்கான காரணம் தெரியவில்லை.

போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், இதேபோல் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. 20 கிலோ எடை கொண்ட ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை வைத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி பிரதமரைக் கொல்லப்போவதாக மின்னஞ்சல்கள் வந்தன. இந்த ஆண்டும் அதே ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Forbes : விட்டதை பிடிச்ச அம்பானி - உலக பணக்காரர்களில் தமிழருக்கு இடம்!

ABOUT THE AUTHOR

...view details