கர்நாடகாவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நபர், உடற்கூராய்வு சமயத்தில் உயிர்ப்பெற்ற சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மஹலிங்கபுரா நகரைச் சேர்ந்த சங்கர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்று மஹலிங்கபுரா-ரபகவி சாலையில் பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காப்பாற்றுவது கடினம் எனக் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சங்கரின் உறவினர்கள், அவரை மஹலிங்கபுரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.