ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் கோவிட்-19 தொடர்பான உயிரிழப்பு புள்ளி விவரங்கள் குறைத்து காட்டப்படுகிறதே என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, இந்தச் சூழலில் இதுபோன்ற ஆராய்ச்சி தேவையற்றது.
'இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை' ஹரியானா முதலமைச்சர் காட்டமான பதில் - மனோகர் லால் கட்டர் கோவிட்-19 உயிரிழப்பு
புள்ளிவிவரங்களால் இறந்தவர்கள் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை என, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
Manohar Lal Khattar
புள்ளி விவரங்களால் இறந்தவர்கள் உயிருடன் திரும்பிவரப்போவதில்லை எனக் காட்டமாக பதிலளித்தார். நாம் உயிருடன் இருப்பவர்களை எப்படி காப்பாற்றுவது எனப் பார்க்க வேண்டுமே தவிர, இறந்தவர்களை குறித்து ஆராய்ந்து விவாதிப்பது முறையல்ல என்றார். ஹரியானா மாநிலத்தில், கடந்த ஒரே நாளில் 11,504 பாதிப்புகள், 75 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணியுங்கள்'