கோர்பா:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மது விற்பனை அமோகமாக நடந்தது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம், ஹார்டி பஜார் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் இளைஞர் ஒருவர் மது வாங்கியுள்ளார். அதன்பின் அந்த பாட்டிலில் மது உடன் தவளையின் உடல் மிதந்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். அதன்பின் அவருக்கு மற்றொரு பாட்டிலை ஊழியர்கள் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட்டங்கள் சமூக வலைதளங்களில் வைராகி சர்ச்சையை கிளப்பின.