பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ளதுசெளசா என்ற கிராமம். இங்கு பாயும் கங்கை ஆற்றின் கரையில் நான்கு டஜன் (48) இறந்தவர்களின் உடல்கள் சிதறி கிடந்தன. இந்த உடல்களை அங்குள்ள நாய்கள் குதறித் தின்னும் கோரக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பக்சர் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் புகார் தெரிவித்தார்.
கங்கை ஆற்றின் கரை ஒதுங்கிய 48 உடல்கள்! - கங்கை ஆற்றின் கரையோரம்
பக்சர் (பிகார்): கங்கை ஆற்றின் கரையோரத்தில் இறந்த நிலையில் 48 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய உடல்களை அப்பகுதியிலுள்ள நாய்கள் கடித்து தின்னும் பயங்கரக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
dead bodies
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, மாஜிஸ்திரேட் உறுதியளித்துள்ளார்.
கங்கை ஆற்றின் கரையோரத்தில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு இந்த உடல்கள் சிதறிக் கிடந்தன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் உடல்களை அவர்களது உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.