தமிழ்நாடு

tamil nadu

ஒமைக்ரான்; டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

By

Published : Dec 22, 2021, 8:33 PM IST

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

COVID guidelines in Delhi
COVID guidelines in Delhi

டெல்லி:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் 91 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.

இதனால் மத்திய அரசு, மாநில அரசுகளை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், "ஒமைக்ரான் தொற்று காரணமாக டெல்லியில் கலாசார நிகழ்வுகள், அனைத்து விதமான கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. மக்கள் வீட்டிலேயோ கொண்டாடிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முகக் கவசம் அணியாத வாடிக்கையாளர்களை கடைகளில் அனுமதிக்கக் கூடாது. இதனை வர்த்தக கூட்டமைப்புகள் உறுதிபடுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஒமைக்ரானால் பலி... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவை...

ABOUT THE AUTHOR

...view details