தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிராக புற்றுநோய் மருந்தைப் பயன்படுத்த அனுமதி? - அகலப்ருடினிப்

கரோனாவுக்கு எதிராக புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தைப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

DCGI
DCGI

By

Published : Nov 14, 2020, 6:43 AM IST

உலகமே கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது கண்டுபிடித்த வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், இதுவரை மருந்து கண்டுபிடித்த பாடில்லை. பிற நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் கொண்டு கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சிகளையும் யாரும் விட்டுவைக்கவில்லை.

ஆரம்பத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் அவை அந்தளவுக்குப் பலனளிக்கவில்லை என்றே கூற வேண்டும். இத்தகவலை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது.

இச்சூழலில் இந்திய மருத்துவ கவுன்சில் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தான அகலப்ருடினிப்பை (Acalabrutinib) கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த பரிந்துரை செய்தது. இதற்காக இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம் அனுமதியும் கேட்டிருந்தது.

இவ்வேளையில் அந்த அமைப்பின் நிபுணர்கள் கூட்டம் நேற்று (நவ.13) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகலப்ருடினிப்பை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்ததில் கரோனா அறிகுறியுடன் சேர்ந்து அழிவை ஏற்படுத்தும் என்பதாலும் உயிரைக் கூட கை வைக்கும் என்பதாலும் இம்மருந்தைப் பயன்படுத்த மறுப்பு தெரிவிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details