நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக செயல்படும் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்), ஹைதராபாத் மருத்துவர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை தீவிரமான கரோனா பாதிப்பிலிருக்கும் நோயாளிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என -டி-குளுக்கோஸ் மருந்தைக் கொடுக்க இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தில் உள்ள மூலக்கூறு கரோனா நோயாளிகளை விரைந்து மீட்டெடுக்க உதவுகிறது. ஆக்ஸிஜன் தேவையையும் குறைக்கிறது என மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன.