தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Manipur Issue: ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்த INDIA கூட்டணி எம்.பி.க்கள்!

மணிப்பூர் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு உள்ள INDIA கூட்டணி எம்.பி.க்கள், பயணத்தின் இரண்டாவது நாளில், ராஜ் பவனுக்கு வந்து, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து வடகிழக்கு மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் : ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்த INDIA கூட்டணி எம்பிக்கள்!
மணிப்பூர் விவகாரம் : ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்த INDIA கூட்டணி எம்பிக்கள்!

By

Published : Jul 30, 2023, 1:14 PM IST

இம்பால் :மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 04ஆம் தேதி நடைபெற்ற இன மோதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொள்ளும் பொருட்டு, இரண்டு நாட்கள் பயணமாக, அங்கு ஜூலை 29ஆம் தேதி சென்று உள்ள இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) 21 எம்.பி.க்கள் குழு, கவர்னர் அனுசுயா உய்கேயை சந்தித்து உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்து உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா, அத்துடன் ஆளுநரிடம் மனுவும் வழங்க உள்ளதாக, ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரில் நிலைமை மோசமாக உள்ளது. இதுதொடர்பாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆளுநரிடம் ஒரு கூட்டு குறிப்பாணையை சமர்ப்பித்து, விரைவில் அமைதியை மீட்டெடுக்க அவரை வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தற்போதைய நிலைமையை தெரிவிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் கூறி உள்ளார்.

முன்னதாக, ஜூலை 29ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த உள்ளூர் மக்களைக் குடியமர்த்திய 4 நிவாரண முகாம்களுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.க்கள் குழு கூறியதாவது, மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்த தங்களது இந்த பயணம், இன மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "உளவியல் சிகிச்சையை" அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தில், பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, இதுபோன்ற குழுவை அனுப்பவில்லை என்று கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் குழு உடன், மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்றால் தாங்களும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வோம் என்று தெரிவித்து உள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிவதாக, பாரதிய ஜனதா கட்சி பதிலடி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரத்தால் நாடே வெட்கப்படுகிறது - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆளுநர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

ABOUT THE AUTHOR

...view details