தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வங்கிகளில் மாற்றம்... மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடும் வங்கிகள்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வங்கிகளில் குறைந்தளவிலான மக்கள் கூட்டமே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Bank
Bank

By

Published : May 23, 2023, 1:58 PM IST

டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்து ரிசர்வ் வங்கி பணத்தை வங்கிகளில் செலுத்தி அதற்கு இணையான பணத்தை இன்று (மே.23) மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வங்கிகளில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டமே காணப்படுவதாக கூறப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். மக்கள் இன்று முதல் (மே 23) செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தங்கள் கையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதற்கு இணையான பணத்தை மாற்றிக் கொள்லலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

நாளொன்றுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பிரத்யேகமான விண்னப்ப படிவங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதேநேரம் வங்கிக் கணக்குகளில் செலுத்துபவர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தும் போது, வருமான வரிக்கு வழங்கப்படும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பொதுவெளியில் தோன்றிய பிரதமர் மோடி ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் வங்களில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கி அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி வெளியிடப்பட்ட திடீர் அறிவிப்பால் மக்கள் வங்கிகளை நோக்கி படையெடுத்தனர். ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களிடம் இருந்த ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திருப்பிச் செலுத்தி வந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சில உயிரிழப்புகள் நேர்ந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் 2016 ஆண்டு போல் மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் வங்கிகளில் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான வங்கிகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தங்களிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெரும்பாலான வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறிய அளவிலான வரிசைகளே வங்கியின் வாசலில் காத்திருந்தன. சில வங்கிகளில் கூட்டம் மிகக் குறைவாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

பொதுத் துறை வங்கிகளிலும் மக்கள் கூட்டம் மிகக் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடிப்பு முன்கூட்டியே நிறுத்தப்பட்டது, பொது மக்களிடம் போதிய அளவில் இருப்பு இல்லாததே குறைந்த எண்ணிக்கைக்கு காரணம் எனக் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details